"இங்கிலாந்தில் கொரோனா இறப்பு குறைவு".. காரணம் இதுதான்?.. தடுப்பூசி நிபுணர் கருத்து..!!!!

Keerthi
4 years ago
"இங்கிலாந்தில் கொரோனா இறப்பு குறைவு".. காரணம் இதுதான்?.. தடுப்பூசி நிபுணர் கருத்து..!!!!

இங்கிலாந்தில் கொரோனா இறப்பு குறைவாக இருப்பதற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியே காரணம் என்று தடுப்பூசி நிபுணர் தெரிவித்து உள்ளார்.

மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்தில் கொரோனாவால் நிகழக்கூடிய உயிரிழப்புகள் குறைவாக இருப்பதற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியே காரணம் என்று அந்நாட்டு தடுப்பூசி பணிக்குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கியது. இது தொடர்பாக டாக்டர் கிளைவ் டிக்ஸ் கூறியபோது "நீங்கள் ஐரோப்பா முழுவதும் பார்த்தால் தொற்று அதிகரிப்புடன், இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.

ஆனால் இங்கிலாந்தில் அப்படி எதுவும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முக்கிய காரணம் பாதிக்கப்படக்கூடிய ஏராளமான மக்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டதே என நான் நம்புகிறேன்" என்று கூறினார். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிதான் இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு போட்ப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4